அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 26 ஜூன், 2011

தமிழத் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகர சபை உறுப்பினர் கைது

மிழ்த் தேசிய கூட்டமைப்பின் வவுனியா நகர சபை உறுப்பினர் எஸ். சுரேந்திரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நேற்று காலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு. பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
குறித்த நகர சபை உறுப்பினர் செயலாளர் வசந்தகுமாரை நேற்று முன்தினம் வியாழன் மாலை அலுவலகத்திற்கு வெளியே வைத்து தாக்கியுள்ளார் என பொலிஸாருக்கு கிடைத்த புகாரைத் தொடர்ந்து அன்று இரவு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
வவுனியா மாவட்ட நீதிமன்றில் பதில் நீதிவான் எம். சிற்றம்பலம் முன்னிலையில் நகர சபை உறுப்பினர் சுரேந்திரன் நேற்று காலை பொலிஸாரினால் ஆஜர்செய்யப்பட்டு அவர் மீதான குற்றப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டது. மேலதிக விசாரணையினை அடுத்த மாதம் 8ம் திகதிக்கு ஒத்திவைத்த பதில் நீதவான் சபை உறுப்பினரை ஒன்றரை இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதித்தார்.




0 கருத்துகள்:

BATTICALOA SONG