அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 17 மே, 2011

கனிமொழி, ராசாவின் ஆடிட்டர்களை விசாரித்த சிபிஐ!

2 ஜி  வழக்கு தொடர்பாக கனிமொழியின் ஆடிட்டர் ரத்னம் மற்றும் ஆ ராசாவின் ஆடிட்டர் கணபதியிடம் இன்று சிபிஐ விசாரணை மேற்கொண்டது.

ஷாகித் பால்வாவின் டிபி ரியாலிட்டி மூலம் கலைஞர் டிவிக்கு ரூ 212 கோடி பணம் கைமாறிய விவகாரத்தில் கனிமொழி மற்றும் அவரது தாயாரும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவியுமான ராஜாத்தி அம்மாளுக்கு ஆடிட்டராக இருந்தவர் இந்த ரத்னம்தான்.
மேலும் முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ ராசாவின் ஆடிட்டர் வி கணபதியிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டது சிபிஐ. ராசாவின் வெளிநாட்டு முதலீடுகள் உள்ளிட்ட பல விவரங்களை அவரிடம் கேட்டறிந்தனர்.
கனிமொழியின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் மே 20-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், சிபிஐ இன்று கனிமொழி மற்றும் ராசாவின் ஆடிட்டர்களை விசாரித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG