அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 7 மே, 2011

கொத்துரொட்டி விற்பனை நிலையங்களை முற்றுகையிடத் திட்டம்

கொ ழும்பில் கொத்து ரொட்டி விற்பனை செய்யும் உணவகங்கள் மீது கொழும்பு மாநகர சபையின் பொதுச் சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
சில உணவு விடுதிகள் சுகாதாரமற்ற முறையில் கொத்துரொட்டிகளை தயாரிப்பதாக கொழும்பு மாநகர சபையின் பொதுச்சுகாதார திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிராண்ட்பாஸ், மருதானை, கொம்பனித்தெரு, பம்பலப்பிட்டி முதலான இடங்களில் பொதுச்சுகாதார அதிகாரிகள் முற்றுகைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கொத்துரொட்டி மாதிரிகள் எடுத்துவரப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சிலர் பழைய ரொட்டிகள், பழுதடைந்த மரக்கறிகள் என்பற்றை கொத்துரொட்டி தயாரிப்பதற்கு பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG