அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 4 மே, 2011

சொந்தக்கால்களில் நின்று வாழக்கூடிய சமூகத்தை உருவாக்க வேண்டுமென்பதே எமது எதிர்பார்பாகவுள்ளது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா


ற்றவர்களிடம் கையேந்தி வாழ்கின்ற சமூகமாக இல்லாது சொந்தக்கால்களில் நின்று வாழக்கூடிய சமூகத்தை உருவாக்க வேண்டுமென்பதே எமது எதிர்பார்பாகவுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ். பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (3) நடைபெற்ற உலக வங்கியினூடாக ஜப்பான் சமூக அபிவிருத்தி சபையின் அனுசரணையுடன் வடமாகாணத்தில் உள்ளூர் மட்டத்தில் போஷாக்கை மேம்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நீண்டகாலமாக யுத்த சூழலுக்குள் வாழ்ந்து வந்த எமது சமூகத்தை மேம்பாடடையச் செய்வது மிகவும் முக்கியமானது.

இதன் அடிப்படையில் அரசின் கொள்கைத் திட்டங்களுக்கு அமைவாக ஜப்பான் அரசின் சமூக அபிவிருத்தி திட்டத்தினூடாக உலக வங்கியின் நிதியுதவியுடன் போஷாக்கு மேம்பாட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மகிந்த சிந்தனையின் கீழ் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து அதன்மூலம் வளமான சமூகத்தை உருவாக்க வேண்டுமென்பதுடன் மற்றவர்களிடம் கையேந்தி வாழ்கின்ற சமூகமாக இல்லாது சொந்தக் கால்களில் நின்று வாழக் கூடிய சமூகத்தை உருவாக்க வேண்டுமென்பதே தமது எதிர்பார்ப்பு என்றும் அமைச்சர் அவர்கள் உறுதிபடத் தெரிவித்தார்.

அத்துடன் அதிகாரப் பகிர்வு ஊடாக அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்பதே அரசின் நோக்கமென இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தார்.

முன்பதாக நிகழ்விடத்திற்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வரவேற்கப்பட்டதுடன் மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டது.

அரங்கில் உரைகளை ஜப்பான் தூதரகத்தின் 2வது செயலாளர் கஜோ இமாமுறா சுகாதார அமைச்சின் சுகாதாரக் கல்விப் பணிப்பாளர் டொக்டர் சரத் அமுனுகம உள்ளிட்டோர் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

















0 கருத்துகள்:

BATTICALOA SONG