அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 21 ஏப்ரல், 2011

சாய்ந்தமருதில் கவர்ச்சி நடனங்கள்; அமைச்சர் டலஸ் கடுப்பு

சா ய்ந்த மருத்தில் நடைபெற்ற இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் நிகழ்ச்சியொன்றின்போது கவர்ச்சி நடனங்கள் நடத்தப்பட்டமை குறித்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உத்தயோகஸ்தர்களை கடுமையாக திட்டியுள்ளார்.


அண்மையில், கல்முனை பிரதேசத்தில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் கிழக்கு மாவட்ட நிலையம் என்பன இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் திறந்து வைக்கப்பட்டன.
இந் நிகழ்ச்சிக்காக வருகை தந்தவர்களை மகிழ்விப்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் இடைக்கிடையில் கவர்ச்சியான உடையணிந்த யுவதிகளின் நடனங்களும் நடத்தப்பட்டன.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசத்தில் இவ்வாறான கவர்ச்சி நடனங்கள் நடத்தப்பட்டமை குறித்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தனது அமைச்சு அதிகாரிகளை கடுமையாக திட்டியதாக அமைச்சரின் ஊடக செயலாளர் சட்டத்தரணி எவ்.எம். ஹென்ரிக்ஸ் இன்று தெரிவித்தார்.
"சாய்ந்தமருது பிரதேசம் பூரணமாக ஒரு முஸ்லிம் கிராமம். அத்துடன் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெரும்பாலானோர் முஸ்லிம்கள்; என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் டலஸ் அழகப்பெரும, அங்கு முஸ்லிம்களின் கலாசாரத்திற்கு முரணான வகையில் நிகழ்ச்சி நடத்தியமை குறித்து தன் செயலாளர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களை திட்டினார். அத்துடன் இனிமேல் அமைச்சின் கீழ் நடைபெறும் எவ்வித வைபவங்களின் போது நாட்டின் கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுமாறும் உத்தரவிட்டார். அமைச்சரின் இந்த உத்தரவு குறித்து அப்பிரதேசத்தின் முஸ்லிம் தலைவர்கள் பலர் பாராட்டு தெரிவித்தனர் எனவும்" அவர் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG