அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

புலம் பெயர்ந்தவர்களுக்கு மிகவும் நட்பான நாடு கனடா – அமெரிக்க சஞ்சிகை தகவல்

லகில் புலம் பெயர்ந்து வாழ்பவர்களுக்கு மிகவும் நட்பான நாடு கனடா என்றும் அதே சமயம் நெதர்லாந்து, இந்தியா ஆகிய நாடுகள் மிகக் குறைந்த அளவு நட்புடைய நாடுகள் என்றும் போபஸ் என்ற பிரபல அமெரிக்க சஞ்சிகையின் சமீபத்திய இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்காவானது கனடா, பேர்முடா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக நான்காவது இடத்தில் இருப்பதாக எச்.எஸ்.பி.சி. வங்கியின் சர்வதேச புலம்பெயர்ந்தோர் பற்றிய ஆய்வு தெரிவித்திருப்பதாக இந்த சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மக்களுடன் நட்பாகி, மொழியைக் கற்று புதிய கலாசாரத்திற்கு தம்மை பழக்கப்படுத்திக் கொள்வதற்கு இந்த நான்கு நாடுகள் மிகவும் இலகுவாகவுள்ளன என்று குறிப்பிட்டள்ள இந்த அறிக்கையில் இந்தியா எந்த இடத்திலிருக்கின்றது என்று குறிப்பிடப்படவில்லை. 

0 கருத்துகள்:

BATTICALOA SONG