அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

புதிய தொழில்நுட்பங்களுடன் புலிகளால் தயாரிக்கப்பட்ட கண்ணிவெடிகள்

வி டுதலைப் புலிகளால் புதிய தொழில்நுட்பங்களுடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கண்ணிவெடிகள் கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக கோணாவில் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர்.

கண்ணிவெடி அகற்றுதல் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும்போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
“கிளிநொச்சி மாவட்டத்தில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை முழுமையாக அகற்றிய பின்னர் மக்கள் மீள்குடியேற முடியும். மிக அவதானத்துடனேயே கண்ணிவெடிகளை நாம் அகற்றிவருகிறோம்.
கண்ணிவெடிகளை வழமையான செயற்பாட்டுடன் அகற்ற முடியாதுள்ளது. நாம் அகற்ற முற்படும்போது வெடிக்கும் வகையில் விடுதலைப் புலிகள் அவற்றை மாற்றியமைத்துள்ளனர். அத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கண்ணிவெடிகள் அதிகமாக புதைக்கப்பட்டுள்ளன” என அவர்கள் குறிப்பிட்டனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG