அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

காமன்வெல்த் ஊழல்: கல்மாதி கைது

ந்தியத் தலைநகர் தில்லியில் சென்ற வருடம் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் தலைமை ஏற்பாட்டாளரான சுரெஷ் கல்மாதி ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் விசாரிக்கப்பட்டதை அடுத்து கடந்த ஜனவரியில் அவர் விளையாட்டுக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து நிர்பந்தத்தின் பேரில் இறங்கியிருந்தார்.
தான் எவ்வித குற்றமும் செய்யவில்லை என்று கல்மாதி வாதிட்டு வருகிறார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு இந்திய அரசு பல நூறு கோடி டாலர்களை செலவழித்திருந்தது.
ஆனால் இந்தியாவின் பெருமுயற்சியைக் காட்சிப் படுத்துகின்ற ஒரு நிகழ்வாக இந்த விளையாட்டுப் போட்டிகள் அமைந்திருக்கவில்லை என்றும் மாறாக தாமதங்கள், மோசமான கட்டிடப்பணிகள், எங்கும் மலிந்திருந்திருந்ததாக மீண்டும் மீண்டும் வெளிவந்த ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவற்றால் இந்தியாவுக்கு அவப்பெயரே ஏற்பட்டிருந்ததாகவும் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG