அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 18 ஏப்ரல், 2011

480 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்படவுள்ளனர்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 480 பேர் எதிர்வரும் 23ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

'புனர்வாழ்வளிக்கப்பட்ட இவர்கள் திருமணமாகி பிள்ளைகளுடன் உள்ளனர். சிங்கள, தமிழ் புத்தாண்டையொட்டியே இவர்கள் விடுவிக்கப்படவுள்ளனர்' என அவர் கூறினார். வவுனியா கலாசார நிலையத்தில் வைத்து இவர்கள் விடுவிக்கப்படவுள்ளனர். அத்துடன், அனைத்து புனர்வாழ்வு நிலையங்களிலும் புதுவருடக் கொண்டாட்டங்கள் நடைபெற்றதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவித்தார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட 7000 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இதுவரையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 4,100 பேர் விடுதலை செய்யப்பட வேண்டியுள்ளனரெனவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG