அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 4 மார்ச், 2011

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கை நிறுத்தப்படுமானால் அரசாங்கமே பொறுப்பு

ர்வதேச இராணுவ குற்றவியல் நீதிமன்றம் முன்பாக இலங்கை நிறுத்தப்படுமானால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டினார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பாகவோ அதில் நியமிக்கப்பட்டவர்கள் சிலர் குறித்தோ ஐ.தே.க.வுக்கு நம்பிக்கையில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார்.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே மங்கள சமரவீர எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,

நாட்டுக்கு எதிராக சர்வதேச ரீதியில் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து முன் வைக்கப்படும் போது, அதற்கு பதிலளிக்கும் வகையிலும் அந்த சவாலை வெற்றி கொள்ளும் விதத்திலும் நம்பிக்கைமிக்க சுயாதீனமான பொதுவான அமைப்பொன்றை அரசாங்கம் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால் அரசாங்கம் அவ்வாறானதொரு நம்பகத்தன்மையான அமைப்பொன்றை உருவாக்கவில்லை. அதனை விடுத்து எதுவிதமான சர்வதே தர நிர்ணயமும் இல்லாத நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்தது.
இக்குழுவிற்கு நியமிக்கப்பட்ட சிலர் மீது எதுவிதமான நம்பிக்கையும் எமக்கில்லை. அவர்கள் பக்கச் சார்பானவர்கள் அக் குழுவின் விசாரணைகளால் பலன் ஏதும் கிடைக்கப் போவதில்லை.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே தெற்காசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்கப் பிரதிநிதி ரொபேட் ஓ பிளேக் இலங்கை சர்வதேச இராணுவ குற்றவியல் நீதிமன்றம் முன் நிறுத்தப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறானதோர் நிலைமை எமது நாட்டுக்கு ஏற்படுமானால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும். எகிப்து ரியூனிசியா, லிபியா நாடுகளில் உள்ள நிலைமைகளை ஒத்ததாகவே இலங்கை நிலைமை உள்ளதாகவும் பிளேக் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG