அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 17 மார்ச், 2011

இந்திய நாடாளுமன்ற அமளி

ன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த 2008-ம் ஆண்டு, நம்பிக்கை வாக்குக் கோரிய நேரத்தில், அந்த அரசைக் காப்பாற்ற மற்ற கட்சி எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்ததாக வெளியான விக்கிலீக்ஸ் தகவலை அடுத்து, வியாழனன்று இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.

முறை தவறி நடந்த அரசு இனிமேல் ஆட்சியில் தொடரக் கூடாது என்றும், பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுத்தன.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமானவராகக் கருதப்படுபவருமான முன்னாள் அமைச்சர் சதீஷ் சர்மாவின் உதவியாளர் நசிகெடா கபூர் என்பவர், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பிற கட்சி எம்.பி.க்களுக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 60 கோடி ரூபாய் ரொக்கத்தை அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவரிடம் காட்டியதாகவும், அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோக்தள எம்.பி.க்கள் சிலருக்கு ஏற்கெனவே தலா 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் கூறியதாக விக்கிலீக்ஸ் பெற்ற தகவல்களை ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது.
இது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி, ஜனநாயகப் படுகொலை என்றும், வெட்கப்படக்கூடியது என்றும் எதிர்க்கட்சிகள் கோஷமிட்டன.
இனிமேல் இந்த அரசு ஒரு நிமிடம் கூட ஆட்சியில் தொடரத் தகுதியில்லை என்று மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஆவேசமாக வலியுறுத்த, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக அரசுக்கு எதிராகக் கோஷமிட்டார்கள்.
இதுதொடர்பாக அவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் ஆளுங்கட்சியினருக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
அதனால் அவை நடவடிக்கைகளும் பாதிக்கப்ட்டன.
மாநிலங்களவையிலும் இதே நிலை நீடித்தது. அங்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிராகரித்தார்.



0 கருத்துகள்:

BATTICALOA SONG