அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 17 மார்ச், 2011

பாடசாலைகளின் அபிவிருத்தியையும், வெற்றியையும் கடந்த கால யுத்தம் பெரிதும் பாதித்துள்ளது - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

டந்த கால யுத்தம் பெரும்பாலான பாடசாலைகளில் வெற்றியையும் அதன் அபிவிருத்தியையும் வெகுவாக பாதித்துள்ளது என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்று (15) இயக்கச்சி அ.த.க. பாடசாலையில் இடம்பெற்ற வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் பாடசாலைகளுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைமைகளை குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளின் நிலைமைகளை நாம் அவ்வாறே விட்டுவிட முடியாது. அதனை மாற்றியமைத்து பாடசாலைகளை வெற்றியை நோக்கி இட்டுச் செல்ல வேண்டும் இதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது.

பாடசாலைகளின் வெற்றியும் அபிவிருத்தியும் என்பது தனியே எம்போன்ற அரசியல்வாதியாலோ பாடசாலை நிர்வாகத்திலோ அரசிடமோ தங்கியுள்ள விடயமல்ல மாறாக அது அப்பாடசாலைச் சேர்ந்த சமூகத்தின் அக்கறையிலும் தங்கியுள்ளது.

பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள் பங்களிப்பு முக்கியமானது அதிலும் குறிப்பாக வெளிநாடுகளிலுள்ள பழைய மாணவர்களின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான அபிவிருத்தியில் உச்ச நிலையில் உள்ள பாடசாலைகளின் பின்னால் அதன் புலம்பெயர் பழைய மாணவர்களின் பங்களிப்புதான் நிறையவே காணப்படுகிறது. எனவே பாடசாலைகளின் பழைய மாணவர்களும் அந்தச் சமூகமும் பாடசாலைகளின் அபிவிருத்தியில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும் பாடசாலைகளின் தேவைகளை கேட்டுக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் விரைவில் பாடசாலைக்கு சுற்றுமதில் ஒன்றை அமைத்து தருவதாகவும் எதிர்காலத்தில் சகல வசதிகளுடன் கூடிய கட்டிடம் அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாகவும் தெரிவித்த அவர் பாடசாலைக்கான பாரம்பரிய தமிழ் இன்னிய அணியினை உருவாக்குவதற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கித் தருவதாகவும் உறுதியளித்தார்.

பாடசாலை அதிபர் ரவிக்குமார் தலைமையில் இடம்பெற்ற விளையாட்டு போட்டி நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் அதிபர் திருமதி இராசரத்தினம் கோட்டக் கல்வி அதிகாரி ஆனந்தசிவம் 552 படை பிரிவின் அதிகாரி ஜெயவிக்கிரம மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.





















0 கருத்துகள்:

BATTICALOA SONG