அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 25 மார்ச், 2011

அரசியலில் சூப்பர் ஸ்டார் அழகிரி-மதுரையில் குஷ்பு ஜால்ரா!

சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் அரசியலில் அண்ணன் அழகிரிதான் சூப்பர் ஸ்டாராக்கும் என்று நடிகை குஷ்பு பேசியுள்ளார்.

திமுகவின் தடபுடல் பேச்சாளர்களில் ஒருவராக மாறியுள்ள குஷ்பு தற்போது தேர்தல் பிரசாரக் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளார். மதுரையில் அழகிரி வீட்டிலிருந்து தனது பிரசாரத்தை அவர் தொடங்கியுள்ளார்.
அழகிரிக்கு ஒரு சால்வையைப் போட்டு வணங்கி, ஆசிர்வாதம் பெற்று பிரசாரத்தைத் தொடங்கினார் குஷ்பு.
அவர் பேசும்போது, சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அரசியலில் சூப்பர் ஸ்டார் அண்ணன் அழகிரி.
5 வருசம் ஓய்வுக்கு போன ஜெயலலிதாவை புறக்கணிக்கனும். 5 வருசம் கூட இருந்த வைகோவை கழட்டி விட்ட ஜெயலலிதா சாதாரண பொதுமக்களை என்ன செய்வார் என்று நினைத்துப்பாருங்கள்.
ஜெயலலிதா திமுக தேர்தல் அறிக்கையை காப்பி அடித்திருக்கிறார். அவர் தேர்தலில் பாஸ் ஆகமாட்டார். பெயில் ஆகிவிடுவார் என்றார் குஷ்பு.

பிடித்துப் பார்க்க துடித்த இளைஞர்கள்!

குஷ்புவின் பேச்சை விட அவரைப் பார்த்து ரசிக்கத்தான் பெரும் கூட்டம் கூடியது. குறிப்பாக இளைஞர்கள் குஷ்புவைப் பார்த்து முண்டியடித்தனர். அவர்கள் அத்தனை பேரும் குஷ்புவை கையைப் பிடித்து பார்க்க விரும்பி முண்டியடித்ததைப் பார்த்து புரிந்து கொண்ட குஷ்பு, தற்காப்பாக தானே அவர்களுக்கு கை கொடுத்து தப்பினார்.
அவர்களில் பலரும் ஜொள்ளு விட்டபடி, அழகாக இருக்கீங்கா, கலரா இருக்கீங்க என்று டிவி நிகழ்ச்சிகளில் காம்பியர்களைப் பார்த்து நேயர்கள் வழிவதைப் போல சொல்லவே குஷ்புவுக்கே வெட்கமாகி விட்டது.
கோவில் கட்டிய மக்களாச்சே, நேரில் பார்த்தால் சும்மாவா இருப்பார்கள்...!

0 கருத்துகள்:

BATTICALOA SONG