அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 21 மார்ச், 2011

சோனியாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு புளொட் சர்வதேச செயலகம் கண்டனம்

ந்திய காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி எதிராக லண்டனில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தினை வன்மையாக கண்டிக்கின்றோம். அத்துடன் லண்டனில் சோனியா காந்தி அம்மையாருக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்திற்கும் (புளொட்) எதுவித தொடர்பும் இல்லை என தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சர்வதேச செயலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் சர்வதேச செயலகம் சார்பாக செ.ஜெகநாதன் விடுத்துள்ள அறிக்கையின் முழு வடிவம்,
பொதுநலவாய நாடுகளின் 14ஆவது கூட்ட தொடரில் பேரூரை நிகழ்த்துவதற்காக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி லண்டன் நகரிற்கு வந்திருந்தார்.
ஈழத் தமிழினத்தின் விரோதமான சக்திகளின் தூண்டுதலில் மார்ச் மாதம் 17ஆம் திகதி சில விஷமிகள் சோனியாகாந்தி எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தியிருந்தனர். இதனை தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சர்வதேச செயலகம் வன்மையாக கண்டிக்கிறது.
பல சகாப்தங்களாக அரசியல் அங்கீகாரம் கோரி போரடிவரும் ஈழத் தமிழர்களுக்கு ஒரே ஒரு தடவை மாத்திரமே சட்ட திருத்தத்தின் மூலம் ஒரு தீர்வு பொதி கைச்சாத்திடப்பட்டு இருந்தது. அந்த 13ஆவது சட்ட திருத்தத்தினை ஏற்படுத்தியவர் சோனியா காந்தியின் கணவரான ராஜீவ் காந்தி என்பதினை ஈழத் தமிழர்களும் தமிழீழ மக்கள் விடுதலை கழகமும் மறக்கவில்லை.
ஈழத் தமிழினம் சோனியா காந்தியின குடும்பத்திற்கு விசுவாசமாகவே உள்ளது. அத்துடன் காங்கிரஸ் கட்சியே தம்மை காப்பற்றக்கூடிய வல்லமை உடைய கட்சி என்பதினையும் அவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.
மேலும், இலங்கை தமிழர் பக்கமே தாம் உள்ளதாகவும் அவர்கள் மீது எப்போதுமே தனக்கு அனுதாபம் உண்டு என்றும் சோனியா காந்தி லண்டனில் வைத்து தனது நிலைப்பாட்டினை தெரிவித்ததோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் இனியும் தாமதிக்காது வழங்கப்பட வேண்டும் என்று இலங்கை அரசிற்கு கோரிக்கையும் விடுத்திருந்தார்.
இதனை சகித்து கொள்ள முடியாத சக்திகள் சிலர் ஈழ தமிழினம் தொடர்ச்சியாகவே இன்னல்களுக்கு உள்ளாக வேண்டும் என்று திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர்.
இவர்களின் தூண்டுதலில் சிலர் ஆர்ப்பாட்டத்தினை நிகழ்த்தியதோடு தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் உறுப்பினர்கள் என்று தெரிவித்தும் உள்ளனர். தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் உறுப்பினர்கள் என்று கூறிக்கொள்ளும் ஜோகி என்பவர் இதனை ஏற்பாடு செய்ததாக சில தரப்பினால் குறுந்தகவல் சேவை மூலம் செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
ஜோகி' என்பவர் ஒரு போதும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தில் அங்கம் வகித்தது இல்லை என்பதினை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கும் இந்திய அரசிற்கும் அறியத்தருகின்றோம்.
காங்கிரஸ் கட்சியுடன் நல்லுறவை பேணிவரும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்திற்கு அவப்பெயரை உண்டு பண்ணுவதற்காக சில விஷமிகளினால் திட்டமிட்டு தவறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
லண்டனில் சோனியா காந்தி அம்மையாருக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்திற்கும் எதுவித தொடர்பும் இல்லை என்பதினை அறியத்தருகின்றோம்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG