அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 21 மார்ச், 2011

தனிமனித தவறுகளை எமது கட்சியோடு சம்பந்தப்படுத்துவது அநாகரீகமான செயலாகும்!...

னிநபர்கள் புரியும் தவறுகளையோ அன்றி குற்றச்செயல்களையோ எமது கட்சியோடு சம்பந்தப்படுத்துவது என்பது எமது கட்சி மீது அவதூறுகளை பொழியும் திட்டமிடப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமன்றி இச்செயலானது ஒரு அநாகரீக செயலுமாகும்.
அண்மையில் யாழ் பத்திரிகை நிறுவனம் ஒன்றினுள் நுழைந்து அப்பத்திரிகைக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து தமிழ் பொலிஸார் ஒருவர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்திருந்தன. அதில் கைது செய்யப்பட்டிருக்கும் தமிழ் பொலிசாரை எமது கட்சியோடு சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிட்டிருப்பது திட்டமிடப்பட்டு பொய்யாக புனையப்பட்ட ஒன்றாகும்.

நாம் மக்கள் மத்தியில் நிரந்தரமாகவே தங்கியிருந்து எமது மக்களுக்கான பணிகளை தொடர்ந்தும் ஆற்றி வருபவர்கள். இதில் மக்கள் வேறு நாம் வேறு என அன்றி நாம் மக்கள் மத்தியில் இரண்டறக்கலந்து வாழ்ந்து வருபவர்கள். எமது கட்சியின் பணிமனை நோக்கி வந்து செல்பவர்கள் எம்மிடம் வேலை வாய்ப்புக்கள் மற்றும் உதவிகளை பெறுபவர்கள் எமது ஆதரவாளர்கள் உறவினர்கள் நண்பர்கள் என எம்மை சுற்றி மக்கள் தொடர்புகள் தினமும் அதிகரித்து செல்கிறது. அதற்காக எம்மோடு தொடர்புகள் உறவுகளை கொண்டிருப்பவர்கள் அனைவரும் எமது கட்சியின் அங்கத்தவர்கள் என்று அர்த்தமல்ல.

இந்நிலையில் யாழ் உதயன் பத்திரிகைக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவிக்கப்படும் பொலிசார் எமது கட்சியின் உறுப்பினர் என தெரிவிக்கப்படுவதை நாம் மறுக்கின்றோம். அது மட்டுமன்றி நடந்த சம்பவம் குறித்து கற்பனையில் சோடிக்கப்பட்ட செய்திகளை பரப்புவதன் மூலம் எமது கட்சி மீது அவதூறு பரப்பும் திட்டமிட்ட செயல்களையும் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இதே வேளை அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கும் சம்பவம் உண்மையாயின் அந்நபர் மீது சம்பந்தப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தாராளமான உரிமை உண்டு என்பதையும் நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கும் அந்த அறிக்கையில் அச்சுறுத்தல் மற்றும் வன்முறை சம்பவங்கள் யாரால் யார் மீது நடத்தப்பட்டாலும் இவற்றை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

0 கருத்துகள்:

BATTICALOA SONG