பூமியதிர்வால் தாக்கப்பட்ட புக்குசிமாவின் இலக்கம் - 1 அணு மின் நிலையத்தின் மூன்றாவது உலையில் ஜதரசன் வெடிப்பு இன்று காலை ஏற்பட்டதாக ஜப்பானிய அரசாங்க அணு பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.
இதே அணுமின் நிலையத்தில் முதலாவது இலக்க உலை நேற்றுமுன்தினம் சனிக்கிழமை வெடித்தது. இதன் பின்னர் முற்பகல் 11.01 மணிக்கு இந்த இரண்டாவது வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மக்களை 20 கிலோமீற்றருக்கு அப்பால் நகருமாறும் கட்டடங்களின் உள்ளேயே இருக்குமாறும் அணு மற்றும் கைத்தொழில் பாதுகாப்பு முகவரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பூமியதிர்வின் பின் இந்த முதலாம் இலக்க அணுமின் நிலையம் மூடப்பட்டிருந்தது. ஆனால், சில உலைகளின் குளிரூட்டும் தொகுதிகள் செயலிழந்தமையால், கதிர்வீச்சு மட்டமும் அதிகரித்தது.
மையாகி கடற்கரை பகுதியில் 2000 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது. இதற்கு முன் 1,597 மரணங்களும் 1,481 பேர் காணாமல் போனமையுமே உத்தியோகபூர்வமாக ஏற்கப்பட்ட தரவாக இருந்தது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக