குவைத்தில் மதுபானம் தயாரித்த இலங்கைப் பெண்ணொருவர் அஹ்மதி பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களால் கைதுசெய்யப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அல் வதான் பத்திரிகை தெரிவித்துள்ளது.
மஹ்போலா நகரிலுள்ள கட்டிடமொன்றில் இப்பெண் மதுபானம் விற்பனை செய்வதாக இரகசிய தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதையடுத்து அங்கு விரைந்த அஹ்மதி பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் அப்பெண்ணை கைது செய்ததுடன் அவரிடமிருந்த உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 3 போத்தல் மதுபானத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
தனது வீட்டில் இம்மதுபானத்தை தயாரித்ததாக அப்பெண் விசாரணையின்போது ஒப்புக்கொண்டுள்ளார். அதையடுத்து அவரின் வீட்டை சோதனையிட்ட பொலிஸார், மதுபானம் மற்றும் மதுபான தயாரிப்பு உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக