அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 5 மார்ச், 2011

பார்வையற்ற நபரை இரு வாரங்களுக்குள் விடுவிக்க இணக்கம்

டம்பெயர்ந்தோருக்கான முகாமில் தடுத்துவைக்கப்பட்டு, பின்னர் பூஸா தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ள பார்வையற்ற நபர் ஒருவரை இரு வாரங்களுக்குள் விடுவிப்பதற்கான பொறுப்பை சட்டமா அதிபர் நேற்று வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றில் ஏற்றுக்கொண்டுள்ளார்.

சிறி செல்வன் அன்டன் ஜுட்ஸ் எனும் மேற்படி பார்வையற்ற நபர் தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் சிராணி திலகவர்தன, கே. ஸ்ரீபவன், எஸ்.ஐ.இமாம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அவ்வேளையில் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச வழக்குரைஞர் துஷார குமாரகே, சந்தேக நபரை இரு வாரங்களுக்குள் விடுவிப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இவ்வழக்கில் மனு தாரர் சார்பில் சட்டத்தரணிகள் எம்.ஏ. சுமந்திரன், விரான் கொரையா, சரித டி பொன்சேகா ஆகியோர் ஆஜராகினர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG