தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் கிரிமினல் குற்ற வழக்குகளை சந்தித்துவரும் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்த வேண்டாம் என்று தேசிய தேர்தல் கண்காணிப்பகம் என்கிற தன்னார்வ அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கிறது.
2006 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 77 பேர் பல்வேறு கிரிமினல் வழக்குகளை சந்தித்துவருவதாக இந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
அதாவது தமிழக சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒருபகுதியினர் (33 சதவீதம் பேர்) குற்ற வழக்குகளை சந்தித்து வருவதாக, தேசிய தேர்தல் கண்காணிப்பகத்தின் சார்பில் பேசவல்ல துணைபேராசிரியர் சுதர்சன் பத்மனாபன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இந்த 77 பேரில் 25 பேர் கொலை வழக்கு உள்ளிட்ட மிகக்கடுமையான கிரிமினல் வழக்குகளை சந்திப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் சரிபாதி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் வருமானவரித்துறையின் பான் அட்டை விவரங்களை தரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த பின்னணியில், அரசியல் கட்சிகள் இந்த தேர்தலிலாவது தங்களுடைய வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது அவர்கள் கிரிமினல் வழக்குகளை சந்திக்காதவர்களாகவும், வருமானவரி குறித்த முறையான விவரங்களை வெளியிடுபவர்களாகவும் தேர்ந்தெடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக