தொகுதி பங்கீடு விவகாரத்தில் நாளைக்குள் (ஞாயிறு) ஒரு முடிவுக்கு வரும்படி, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார். இந்த விவகாரத்தை மேலும் இழுத்தடித்தால், தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவும், திரிணமுல் காங்., திட்டமிட்டுள்ளது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மம்தாவின் திரிணமுல் காங்கிரசும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தொகுதி பங்கீடு விவகாரத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே, இன்னும் சுமுகமான முடிவு ஏற்படவில்லை.
மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், மூன்றில் ஒரு பங்கு தொகுதியை தங்களுக்கு ஒதுக்கும்படி காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. அதேநேரத்தில், "60 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது' என, மம்தா தரப்பும் பிடிவாதம் பிடித்து வருகிறது.
இந்நிலையில், வரும் 13ம் தேதி தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை அறிவிக்கப் போவதாக இடதுசாரி கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, "இடதுசாரி கட்சி வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதற்கு முன், நாம் அறிவித்து விட வேண்டும்' என, மம்தா முடிவெடுத்துள்ளார்.
தனது கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான முகுல் ராயை அழைத்து, " டில்லியிலேயே இன்னும் சில நாட்களுக்கு தங்கியிருங்கள். மேற்கு வங்கத்திலிருந்து, டில்லிக்கு சென்றுள்ள காங்., தலைவர்கள், காங்., மேலிடத்திடம் என்ன கூறுகின்றனர் என்பதை கவனியுங்கள். தொகுதி பங்கீடு விவகாரத்தில் விரைவில் ஒரு முடிவுக்கு வரும்படி, காங்., தலைவர்களை வற்புறுத்துங்கள். இல்லையெனில் மக்கள், நம் கூட்டணி மீது நம்பிக்கை இழந்து விடுவர் என்பதையும் அவர்களிடம் எடுத்துக் கூறுங்கள்' என, தெரிவித்துள்ளார். இதனால், முகுல் ராய் டில்லியிலேயே முகாமிட்டுள்ளார்.
இதற்கிடையே, திரிணமுல் காங்கிரசில் உள்ள சில தலைவர்கள், மம்தாவிடம் சில விஷயங்களை கூறியுள்ளனர். " மேற்கு வங்கத்தை சேர்ந்த காங்., மூத்த தலைவர்கள், தங்களின் உறவினர்கள் இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என, விரும்புகின்றனர். அதற்காக, கூடுதல் சீட்களை நம்மிடம் கேட்டுப் பெற விரும்புகின்றனர். தங்களின் விருப்பத்தை சாதிப்பதற்காக, காங்கிரஸ் மேலிடத்திடம் கூட்டணி பற்றி தவறான விஷயங்களை கூறி, குழப்புகின்றனர்' என, மம்தாவிடம் அவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து மேற்கு வங்க அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:தனித்து போட்டியிட வேண்டும் என, தனது கட்சி தலைவர்கள் கூறினாலும், மம்தாவுக்கு அதில் விருப்பம் இல்லை. 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் இடதுசாரிகளை, தேர்தலில் தனியாக வீழ்த்துவது அத்தனை சுலபமாக இருக்காது என, மம்தா கருதுகிறார். இருந்தாலும், காங்கிரசுக்கு 60 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்குவது இல்லை என்ற முடிவில் உறுதியாக உள்ளார்.காங்கிரசின் பிடிவாதம் தொடர்ந்தால், அதை வழிக்கு கொண்டு வருவதற்கும் சில திட்டங்களை அவர் வைத்துள்ளார். முதல் கட்டமாக, தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவிக்க, அவர் திட்டமிட்டுள்ளார். நாளைக்குள் (ஞாயிறு) காங்கிரஸ் தரப்பிலிருந்து, தொகுதி பங்கீடு விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வரவில்லையெனில், வேட்பாளர் பட்டியலை, முந்திக் கொண்டு அறிவிக்கவும் அவர் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், உள்ளடி அரசியலுக்கு பெயர் பெற்ற காங்கிரஸ், மம்தாவின் மிரட்டலுக்கு பணியுமா என்பது சந்தேகம் தான்.இவ்வாறு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக