தேமுதிக போட்டியிடும் 41 தொகுதிகளை அடையாளம் காண்பதில் அதிமுக, தேமுதிக இடையே தொடர்ந்து கடும் இழுபறி நிலவுகிறது.
அதிமுக கூட்டணியில் நிலவி வந்த பெரும் குழப்பம் ஒரு வழியாக நேற்று பாதி முடிவுக்கு வந்தது. மதிமுக, தேமுதிக தவிர பிற கட்சிகளுக்கான தொகுதிகளை நேற்று இறுதி செய்து அறிவித்துவிட்டது அதிமுக.
தன்னிச்சையாக ஜெயலலிதா 160 தொகுதிகளுக்கு ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்ததால் பெரும் கொந்தளிப்பை அடைந்தன கூட்டணிக் கட்சிகள். ஜெயலலிதா சற்றும் எதிர்பாராத வகையில், அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் கொந்தளித்து ஓரணியில் திரண்டதால் ஜெயலலிதா அதிர்ச்சி அடைந்தார்.
தனது தேர்தல் பிரசாரப் பயணத்தை ரத்து செய்து விட்டு கூட்டணிக் கட்சிகளுடன் நேற்று முன்தினம் முதல் பேச்சுவார்த்தைகளை முடுக்கி விட்டார். நேற்று காலை இந்தப் பேச்சுவார்த்தைகள் சூடு பிடித்தன.
இதன் விளைவாக மாலைவாக்கில் மனித நேய மக்கள் கட்சி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னணிக் கழகம், பார்வர்ட் பிளாக் உள்ளிட்டவற்றுக்கு தொகுதிகள் அறிவிக்கப்படன.
இரவு பத்து மணிக்கு மேல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதிகள் அறிவிக்கப்பட்டன.
இருப்பினும் சிபிஎம், தேமுதிக ஆகிய கட்சிகளின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை இரவிலும் நீடித்தது. நள்ளிரவு 12 மணி வரை பேச்சுவார்த்தை நீடித்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும் பேச்சுவார்த்தையின் இறுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கான தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால், தொடர்ந்து நள்ளிரவு 2 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தியும் தேமுதிகவுக்கான தொகுதி்களை அடையாளம் காண்பதில் சிக்கல் தீரவில்லை. நேற்று மாலை 5 மணி முதல் இன்று அதிகாலை 2.45 மணி வரை பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும் இளைஞரணித் தலைவர் சுதீசும் வீடுகளுக்குத் திரும்பினர்.
இந் நிலையில் இன்று மீண்டும் பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ் ஆகியோர் அதிமுக நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர். பின்னர் போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். ஆனால், மாலை 5.30 மணி வரை உடன்பாடு ஏற்படவில்லை.
இன்று தேமுதி்கவுக்கான தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுவிட்டால் ஜெயலலிதாவும், விஜயகாந்தும் சந்தித்து பேசி ஒப்பதத்தில் கையெழுத்திடுவர் என்று கூறப்பட்டது. ஆனால், இழுபறியாக பேச்சுவார்த்தை போய்க் கொண்டுள்ளது.
அதே நேரத்தில் மதிமுக மீண்டும் அதிமுக கூட்டணிக்குத் திரும்புமா இல்லையா என்பது இன்று இரவில் தான் தெரியும்.
தேமுதிகவை முடித்து விட்டு மதிமுகவையும் அதிமுக கவனிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக