அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 23 பிப்ரவரி, 2011

கே.பியின் NERDO அமைப்பு ஜுலையில் பதிவு செய்யப்பட்டது: அரசாங்கம்

கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை செயலாளராகக் கொண்ட வடக்கு கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பு (NERDO) கடந்த வருடம் ஜுலை 9 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டதாக அரசாங்கம் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தது.

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் துனேஷ் கன்கந்த எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் அரசாங்கத் தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன இதைத் தெரிவித்தார்.
அவ்வமைப்பின் தலைவராக தவரட்ணம் சின்னையா என்பவர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
வலன்றின், யூ.எல்.ஜயவாலன், வி.யூ.ஜயவதனன், நந்தகுமார் புனல்ராஜா, சண்முகபாலன் திலீபன் மற்றும் கந்தஸ்வாமி செந்தில் குமார் ஆகியோர் அவ்வமைப்பின் ஏனைய உத்தியோகஸ்தர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG