அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 24 பிப்ரவரி, 2011

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகளில் பலர் வேலையின்றி சிரமம்

மூகத்தில் இணைந்துகொள்வதற்காக இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகளில் பலர் வேலை கிடைக்காது கஷ்டப்படுகின்றனர். இருப்பினும், இவர்களில் சிலர் தங்களது வீடுகளுக்கு அருகில் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் ஜெனரல் சுதந்த ரணசிங்க குறிப்பிட்டார்.

யுத்தம் முடிவடைந்து 12 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அரசாங்கத்தின் புனர்வாழ்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 8,000 பேருக்கு தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 6 மாதங்களில் வடபகுதியில் பெரும்பாலானவர்கள் தமது சமூகத்துடன் இணைந்துள்ளனர். ஆனால், பெரும்பாலானவர்களுக்கு கொழும்பிலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் பயிற்சி வழங்கப்பட்டது.
வடபகுதியில் வருமானத்தை ஈட்டும் வகையிலான திட்டங்களை ஆரம்பிக்குமாறு சர்வதேச நன்கொடையாளர்கள் மற்றும் ஏனைய அமைப்புகளிடமும் கேட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG