புலிகள் போரில் தோற்றதன் பின்னர் கப்பலில் ஆட்களைக் கடத்துவதைப் பிரதானமான தொழிலாகக் கொண்டுள்ளதாகவும் கனடாவிலுள்ளவர்களுக்கும் இந்நடவடிக்கையில் தொடர்புண்டு எனத்தான் நம்புவதாகவும் கனடிய குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி "நசனல்போஸ்ற்' என்ற பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்இறுதியாக வந்த "சண் சீ' கப்பலில் குறிப்பிடக்கூடியளவு தொகையினர் பயங்கரவாத சட்டவிரோத நடவடிக்கைகளில் தொடர்புடையவர்கள் என்றும் கனடாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிப்பவர்கள் என்றும் மேற்படிஅமைச்சர் தெரிவித் துள்ளார்.
கனடியப் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற போதும் இன்னமும் இக்கப்பல் விவகாரம் தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை. அதேவேளை, இக்கப்பல் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் இருவரை மேற்படி பத்திரிகை தொடர்பு கொண்ட போதும் அவர்கள் தங்களது விசாரணைகள் சம்பந்தமான விடயங்களை பகிர விரும்பவில்øலை. இதேவேளை இவ் அகதிகளை தடுத்து வைத்துப் பராமரிப்பதற்கென இதுவரை 18 மில்லியன் கனடிய டொலர்களை கனடிய அரசாங்கம் செலவு செய்துள்ளது எனவும் தற்போது 107 பேர் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் உள்ளதாகவும் தெரிய வருகிறது.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்





























0 கருத்துகள்:
கருத்துரையிடுக