அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 21 பிப்ரவரி, 2011

பாடகர் மலேசியா வாசுதேவன் காலமானார்

பிரபல பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன் தனது 70ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் காலமாகியுள்ளார்.
அண்மைக்காலமாக சுகவீனமடைந்த நிலையில் சென்னை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று காலமாகியுள்ளார். பிரபல பின்னணிப் பாடகரான மலேசியா வாசுதேவன் கடந்த 25 ஆண்டுகளில் எட்டாயிரத்திற்கும் அதிகமான தமிழ்த் திரைப் பாடல்களைப் பாடியுள்ளார். 'பூங்காற்று திரும்புமா.. என் பாட்டை விரும்புமா'', 'ஆசை நூறு வகை வாழ்வின் நூறு சுவை'' போன்ற ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.மேலும் இவர் முதல் வசந்தம், ஊமை விழிகள், திருடா திருடா உட்பட 85க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அத்துடன், இவர் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இவரது மகன் யுகேந்திரன் பின்னணிப் பாடகராகவும் நடிகராகவும் இவரது மகள் பிரசாந்தினி பின்னணிப் பாடகியாகவும் உள்ளனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG