அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 21 பிப்ரவரி, 2011

பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் காலமானார்!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள்(வயது81) இன்று ஞாயிற்றுக்கிழமை(20-02-2011) காலை 6மணியளவில் காலமானார்.
நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த அவர், இன்று காலையில் காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. பகுதி பாரிசவாதத்தினாலும், நீரிழிவு நோய் மற்றும் இருதய நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்த அவர், அண்மை நாட்களாக உடல்நிலை மோசமான நிலையிலேயே இருந்து வந்தார். வைத்தியசாலையில் தங்கியிருந்த இவரை தென்னிலங்கையிலிருந்து வந்த சிங்கள மக்கள் பலரும் நேரில் சென்று பார்த்து வந்தனர். பார்வதியம்மாளின் ஏனைய மூன்று பிள்ளைகள் டென்மார்க், கனடா, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்துவருகின்றபோதிலும், அவரைப் பார்க்க இலங்கை வருவதற்குத் துணியவில்லை. இவரது இறுதிக் கிரியைகள் எப்போது நடைபெறும் என்பது பற்றிய விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.

0 கருத்துகள்:

BATTICALOA SONG