அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

ஸ்ரீதேவியின் 'ரிடயர்மெண்ட் இன்னிங்ஸ்'!

ண்பதுகளின் கனவுக்கன்னியாக இருந்து, ரிடயர் ஆகிப் போன ஸ்ரீதேவி, இப்போது மீண்டும் நடிக்க வருகிறார். தமிழில் அல்ல, இந்தியில்!

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் 1970 மற்றும் 80 களில் முன்னணி கதாநாயகியாக கலக்கியவர் ஸ்ரீதேவி. தமிழில் நாயகியாக அறிமுகமான முதல் படம் மூன்று முடிச்சு. 1977-ல் வெளியான 16 வயதினேலே அவருக்கு பெரும் புகழ் தந்தது.
தொடர்ந்து சிவப்பு ரோஜாக்கள், பிரியா, கல்யாணராமன், கவரிமான், குரு, ஜானி, வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை... என அவரது வெற்றிப்பட பட்டியல் பெரிது. அதேபோல இந்தியிலும் பெரும் வெற்றிப் படங்களில் நடித்தார்.
பின்னர் பிரபல இந்தி தயாரிப்பாளரும் நடிகர் அனில்கபூர் சகோதரருமான போனிகபூரை திருமணம் செய்து கொண்டார். 1997-ல் நடிப்புக்கு முழுக்கு போட்டார். தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஸ்ரீதேவி மீண்டும் சினிமாவுக்கு வருவதை அவர் கணவர் விரும்பவில்லை.
எனவே எந்த படத்திலும் நடிக்க வில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தை அமிதாப்பச்சனை வைத்து 'பா' படத்தை தயாரித்த பால்கி தயாரிக்கிறார். பால்கியின் மனைவி கவுரி ஷிண்டே இயக்குகிறார். ;

0 கருத்துகள்:

BATTICALOA SONG