அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

தயா, ஜோர்ஜ் மாஸ்டர்கள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனை பெறவும்

பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகப் பேச்சாளராகச் செயற்பட்ட தயா மாஸ்டர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்பாளராகச் செயற்பட்ட ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று அதனை நீதிமன்றிற்கு அறிவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இரகசியப் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது
.குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேக நபர்களான தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
இந்த இரு சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவருடைய ஆலோசனை இதுவரை கிடைக்கப் பெறவில்லை எனவும் இரகசிய பொலிஸார் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்து அறிவித்துள்ளனர்.
இதன்படி குறித்த வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு பிரதம நீதவான் ரஸ்மி சிங்கப்புலி உத்தரவிட்டதுடன் அன்றைய தினம் சட்ட மா அதிபரின் ஆலோசனையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

0 கருத்துகள்:

BATTICALOA SONG