அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

புதிய கட்சி ஆரம்பிக்கிறார் கே.பி.

புதிதாக தமிழ் அரசியல் கட்சியொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவரான கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் மறைமுகமாக செயற்படுவதாக யாழ்ப்பாண வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Read:  In English 
'கே.பி. தமிழ் அரசியல் கட்சி அமைக்கும் பின்னணியில் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். நடுநிலையான கட்சியாக அது தொடங்கப்படவுள்ளது' என அவ்வட்டாரங்கள் கூறின.
யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் கே.பி. சந்திப்பொன்றை நடத்தினார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலான கே.பி.யின் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின்போது, அவருடன் தமிழ் புலம்பெயர் உறுப்பினர்கள் சிலர் சென்றிருந்தனர்.
பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடனான சந்திப்பில் ஈடுபட்ட கே.பி. வடபகுதி மக்களின் நன்மைக்காக செயற்படப்போவதாகவும் இதன்போது கூறினார்.
இக்கூட்டத்தில் கே.பி. உரையாற்றியபோது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
கடந்த வாரம் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்களை சந்தித்து கே.பி. பேச்சு நடத்தியுள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டிருந்த கே.பி. இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதிலிருந்து அவர் இராணுவத்தினரின் பாதுகாப்பிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG