அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 24 ஜனவரி, 2011

தனது பச்சிளம் குழந்தையை கொலை செய்த இலங்கை பணிப்பெண் கைது

னக்குப் பிறந்த குழந்தையொன்றை சில மணித்துளிகளுக்குள் கொலை செய்தார் என்ற சந்தேகத்தின்பேரில் பஹ்ரெய்னில் பணியாற்றும் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயதான இப்பெண், குழந்தையின் வாயில் துணித்துண்டையொன்றை திணித்து கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கல்வ் டெய்லி நியூஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

கடந்த வியாழனற்று இக்கொலை இடம்பெற்றதாகவும் புதையா நகரில் தான் பணியாற்றும் வீட்டில் களஞ்சிய அறையொன்றில் சடலத்தை மறைத்துவைத்ததாகவும் அப்பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வழக்கத்துக்கு மாறாக நடந்துகொள்வதாக அப்பணிப்பெண்ணிடம் அவ்வீட்டின் உரிமையாளர் கேட்டபோது மேற்படி கொலைச் சம்பவத்தை அப்பெண் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தன்னுடன் காதல் தொடர்புகொண்டிருந்த ஆசிய நாட்டவர் ஒருவரே இக்குழந்தையின் தந்தை எனவும் அப்பெண் கூறியுள்ளார்.
இவ்விடயம் குறித்து பொலிஸில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளதாக பஹ்ரெய்னுக்கான இலங்கையின் கௌரவ கவுன்ஸல் ஜெனரல் பி.பீ. ஹிகொட உறுதிப்படுத்தியுள்ளார். குருதிப்பெருக்கு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண் பின்னர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG