அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 25 ஜனவரி, 2011

அதிரடியாய் கல்மாதி பதவிநீக்கம்

ந்தியத் தலைநகர் தில்லில் நடந்த காமன்வெல்த் போட்டியுடைய ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் சுரேஷ் கல்மாதியை அப்பதவியில் இருந்து இந்தியாவின் விளையாட்டு அமைச்சகம் நீக்கியுள்ளது.
காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலைமைச் செயலாளராக இருந்த லலித் பானோட்டும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
.இந்தியாவில் விளையாட்டுத் துறையின் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அஜய் மக்கன் இந்த அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு இடைஞ்சல்கள் வரக்கூடாது என்பதை உறுதிசெய்வதற்காக இந்த பதவி நீக்கங்கள் செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபரில் நடந்த இந்த விளையாட்டுப் போட்டியின் ஏற்பாடுகளில் நடந்ததாக கூறப்படும் ஊழல் சம்மந்தமாக ஏற்கனவே கல்மாதி, பானோட் ஆகியோர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் எந்த தவறும் செய்யவில்லை என்று இருவரும் கூறிவருகின்றனர்.
காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதன் மூலம் நாட்டுக்கு பெருமை கிடைக்கும் என்று இந்தியா நம்பியிருந்தது.
ஆனால் போட்டி ஏற்பாடுகளை செய்து முடிப்பதில் ஏற்பட்ட காலதாமதங்கள், போட்டி ஏற்பாடுகளில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் காரணமாக நாட்டிற்கு அவப்பெயர் கிடைத்திருந்தது.



0 கருத்துகள்:

BATTICALOA SONG