அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

குச்சவெளியில் நில வெடிப்பு, புதைகுழிகள் ஏற்பட்டு அதிசயம்;பொதுமக்கள் அச்சத்தில்


தி
ருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் நில வெடிப்பு ஏற்பட்டு இடத்துக்கிடம் மண் குவிந்து வருவதுடன் சில இடங்களில் புதைகுழிகளும் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குச்சவெளி, கலப்பையாறு சுனாமி வீடமைப்பு திட்டத்துக்கு பின்னால் அமைந்துள்ள களப்பு பகுதிலேயே இந்த அதிசய நிகழ்வு இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
சுமார் 400 மீற்றர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதியில் இடம்பெற்றுவரும் இந்த அதிசய நிகழ்வினை அடுத்து அப்பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதிக்கு பொதுமக்கள் பிரவேசிக்காதவாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இது தொடர்பில் ஆராய்வதற்காக கொழும்பிலிருந்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் திருமலைக்கு பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG