அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையத்தில் தீ விபத்து


யா
ழ்ப்பாணம் கந்தர் மடத்தில் தனியார் கல்வி நிலையம் ஒன்று தீக்கிரையாகியுளள்து. யுனிவேசல் கல்வி நிலையமே நேற்று இரவு தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனைக் கண்ணுற்ற யாழ்ப்பாணம் மாநகர சபையின் பஸ் சாரதியொருவர் உடனே யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து உரிய இடத்திற்க்கு விரைந்த தீயணைப்புப் பிரிவினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஆனாலும் இரண்டு கொட்டில்கள் முழுமையாக எரிந்துள்ளதுடன் அங்கிருந்த வாங்குகள் மற்றும் உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளன.
இத்தகையதொரு சம்பவம் கடந்த வாரத்தில் யாழ்ப்பாணம் கண்ணாதிட்டிப் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்க்கும் ஏற்பட்டு பல லட்சம் ரூபாக்கள் நட்டமேற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தகைய சம்பவங்கள் மூலம் யாழ்ப்பாணத்தில் விசமிகளின் செயல்பாட்டிற்கு தனியார் கல்வி நிலையங்கள் உட்பட்டு வருகின்றது.
இது சம்பந்தமாக பொலிசார் உரிய விசாரணைகளை மேற்கொள்வதுடன் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


0 கருத்துகள்:

BATTICALOA SONG