பி பரதமர் டி.எம்.ஜெயரத்ன இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.
மட்டக்களப்பு மாட்ட செயலகத்தில் பிரதமருக்கு அரசாங்க அதிபர் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.அங்கு நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டில் அவர் பங்கு கொண்டார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், சிறுவர் விகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், மாகாண அமைச்சர்கள் உட்பட பல அரசியல் பிரமுகர்களும் உயர் அதிகாரிகளும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் மட்டக்களப்பு, கல்லடி சுவாமி விபுலானந்தா இசை நடனக் கல்லூரிக்குச் சென்ற பிரதமர் அங்கு இடம்பெற்ற சர்வமத தலைவர்கள் மாநாட்டிலும் பங்கு கொண்டார்.
இன்று பிற்பகல் காத்தான்குடி, மட்டக்களப்பில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளிலும் பிரதமர் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 4 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக