வனிதா என் பெயரை கெடுக்கிறார். சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று நடிகர் விஜயகுமார் கூறினார். மகள் வனிதா புகார் பற்றி விஜயகுமார் அளித்த பேட்டி வருமாறு:
பிள்ளைகளை பெத்து வளர்த்து ஆளாக்குவது பெற்ற தாய், தந்தையர் பெயரையும் குடும்பத்தின் பெயரையும் காப்பாற்றுவதற்குத்தான். அந்த பெயரை கெடுப்பதற்காக அல்ல. நடந்ததை மறைத்து நடக்காத ஒன்றை நடந்ததை போல் செய்தி வெளியிட்டு என்னையும், என் மகன் அருண்விஜய்யையும் என் குடும்பத்தில் உள்ளவர்களையும் என்மேல் அன்பு கொண்ட அனைவரின் மனதையும் புண்படுத்தி இருக்கிறார் வனிதா.
வனிதா என் மகள் என்று கூட சொல்ல முடியாத அளவுக்கு வேதனையிலும், வெட்கத்திலும் இருக்கிறேன். இதுக்கு மேல் என் குடும்பத்துக்கும் , வனிதாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இனியும் இதுபோல தவறான செய்தியை வனிதா வெளியிட்டாலோ, தன்னோட சுயலாபத்துக்காக என் பெயரை பயன்படுத்தினாலோ அவர் மேல் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
நாம் பிள்ளைகளை பெற்று வளர்த்தவர்கள். தம்மைப் போல அவங்களும் பிள்ளைகளை பெத்து வளர்த்து ஆளாக்கும் போதுதான் அந்த வலியை உணர்வாங்க. இதுக்குமேல் என் பெற்ற மனமும் பெருகும் கண்ணீரும் வார்த்தைகளை சொல்ல இடம் கொடுக்க வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 25 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக