அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 25 நவம்பர், 2010

எழுத்தாளர் சாராவுக்கு எதிரான வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனை :பொலிஸார் தகவல்

விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய எழுத்தாளரான சாரா மாலினி பெரேராவுக்கு எதிராக நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான சட்டமா அதிபரின் ஆலோசனையை எதிர்பார்த்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பௌத்தராக இருந்து இஸ்லாம் மதத்தை தழுவிய எழுத்தாளர் சாரா மாலினி பெரோரா, ‘இருளிலிருந்து வெளிச்சத்திற்கு’ (From Darkness to Light ) என்ற நூலை எழுதியமைக்காகவும் கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி இலங்கை வந்திருந்தபோது அரசுக்கு எதிராக தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலும் இவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பஹ்ரெய்னில் வாழ்ந்து வந்த சாரா, எழுதிய மேற்படி நூலில் பௌத்த மதத்தை விமர்சித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG