அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 25 நவம்பர், 2010

வனிதா கணவருக்கு ஜாமீன் கிடைத்தது-வனிதாவும் முன்ஜாமீன் மனு தாக்கல்

டிகர் விஜயக்குமாரின் மகள் வனிதாவின் 2வது கணவர் ஆனந்தராஜுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. அதேசமயம், வனிதா முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

விஜயக்குமார் குடும்பத்தினர் சரமாரியாக புகார்களை சுமத்தியுள்ளார் வனிதா. இதையடுத்து மதுரவாயல் போலீஸார் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து விஜயக்குமார், அவரது 2வது மனைவி மஞ்சுளா, முதல் மனைவியின் மகன் அருண் விஜய் ஆகியோரைக் காணவில்லை. அவர்கள் சென்னையில் இல்லை.
இந்த நிலையில் தற்போது வனிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் விஜயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் படு வேகமாக கைது செய்யப்பட்ட வனிதாவின் கணவர் ஆனந்தராஜுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்து விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. அவர் தினசரி மதுரவாயல் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG