அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 28 நவம்பர், 2010

தியாகராய நகரில் இன்று தடைசெய்யப்பட்ட புலிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்…??? புலம் பெயர் புலிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு பேசும் வைகோ-நெடுமாறன்

லங்கையில் நடைபெற்ற போரில் உயிர் நீத்த விடுதலைப்புலிகள்-ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்து விதமாக வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தியாகராய நகர் பஸ் நிலையம் அருகே உள்ள முத்துரங்கன் சாலையில் இன்று மாலை நடக்கிறது.
கூட்டத்துக்கு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்குகிறார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கொளத்தூர் மணி, மணியரசன், ஆவடி மனோகரன் உள்பட பலர் பேசுகிறார்கள்.
இந்த வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன், பகுதி செயலாளர் தி.நகர் பீடாரவி ஏற்பாடு செய்துள்ளனர். அலங்கார மின் விளக்குகள், பிரமாண்ட டிஜிட்டல் பேனர்கள் தி.நகரில் வழி நெடுக வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தென் சென்னை மாவட்ட ம.தி. மு.க. செயலாளர் வேளச்சேரி மணிமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவீரர் நாள் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் உள்பட முன்னணி தலைவர்கள் பங்கேற்று எழுச்சி உரையாற்றி இருப்பதால் தமிழின உணர்வாளர்கள் திரண்டு வந்து பெருமை சேர்க்க வேண்டும். கழக பிரமுகர்களும், தொண்டர்களும் குடும்பத்துடன் இதில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு வேளச்சேரி மணிமாறன் கூறி உள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG