அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 28 நவம்பர், 2010

இடுப்பைக் கிள்ளிய இளைஞரை, கிள்ளாதீங்கண்ணே என்று கண்டித்த சினேகா!

கோழிப் பண்ணையைப் பார்வையிட வந்த போது, தனது இடுப்பை தொடர்ந்து கிள்ளியபடியும், இடித்தபடியும் இருந்த இளைஞரை, சற்றுகோபத்துடன், தயவு செய்து இப்படி செய்யாதீங்கண்ணே என்று கூறி கண்டித்தார் நடிகை சினேகா.
இதையடுத்து அவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி வெளியேற்றினர்.
நடிப்பு தவிர விளம்பரப் படங்கள், கடை திறப்பு உள்ளிட்டவற்றிலும் பிசியாக இருக்கிறார் சினேகா. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், ஹோட்டல் திறப்பு விழாவில் சினேகா கலந்து கொண்டார்.
அழகான சேலையில், கழுத்து நிறைய நகையைப் பூட்டிக் கொள்ளாமல் சிம்பிளாக அதே சமயம் படு க்யூட்டாக வந்த சினேகாவைப் பார்க்க கூட்டம் கூடி விட்டது.
ஹோட்டல் திறப்பை முடித்த பின்னர் அதன் உரிமையாளர் வைத்துள்ள ஈமு கோழிப் பண்ணையைப் பார்க்கச் சென்றார் சினேகா. இதையடுத்து அங்கு பெரும் கூட்டம் கூடி விட்டது. கூடியிருந்தவர்கள் தங்களது செல்போன்களில் சினேகாவை மனம் போனபடி படம் பிடித்தனர்.
பெண்கள் சிலர் தங்களுக்கு போஸ் தருமாறு கூறவே சினேகாவும் புன்னகைத்தபடி நின்றார். இதையடுத்து தங்களது செல்போன்களில் சினேகாவை படம் எடுத்தனர் அப்பெண்கள்.
அப்போது சினேகாவை நெருக்கியபடி நின்ற ஒரு நபர் அவரது இடுப்பைக் கிள்ளியுள்ளார். இதைப் பார்த்து கோபமடைந்த சினேகா, அவரிடம் திரும்பி, அப்போதிருந்தே இடித்துக் கொண்டே இருக்கறீங்கண்ணே, நல்லா இல்லே. இன்னொரு முறை இப்படி செய்யாதீங்க என்று கண்டித்தார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அந்த நபரை கடுமையாக எச்சரித்து, திட்டி அங்கிருந்து அனுப்பி விட்டனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG