அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 11 நவம்பர், 2010

யோகி, புதுவை இரத்தினதுரையை விடுவிக்குமாறு மனைவிமார் கோரிக்கை

மிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களான யோகி, புதுவை இரத்தினதுரை ஆகியோரை விடுதலை செய்ய உதவுமாறு அவர்களின் மனைவிமார் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் இன்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர்.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை இன்று யாழ். அரியாலை சரஸ்வதி சனசமூக மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்வாணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளித்த புதுவை இரத்தினதுரையின் மனைவி, தனது கணவர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் வயோதிபரான அவரின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு அவரை விடுவிக்க வேண்டுமெனவும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுத் தலைவர் யோகரட்ணம் யோகியின் மனைவியும் இன்று நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். தனது கணவர் யோகியை விடுதலை செய்யுமாறு அவரும் வலியுறுத்தினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG