அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 24 நவம்பர், 2010

ஈழத்தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு : கருணாநிதி கிருஷ்ணாவிடம் வலியுறுத்து

லங்கைத் தமிழர்கள் தொடர்பில் அரசியல் தீர்வொன்றுக்கு வலியுறுத்துமாறு தமிழக முதல்வர் மு.கருணாநிதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிரு~;ணாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளியுறவுத்துறை அமைச்சர் நாளை வருகை தரவுள்ளார்.
"மீளக்குடியமர்த்தப்படாமல் 30 ஆயிரம் மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர். இது கவலைக்குரிய விடயமாகும். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இவ்விடயம் தொடர்பாக கவனத்தில் எடுக்க வேண்டும்" என மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தினை உரிய காலத்திற்குள் பூர்த்தி செய்து கொடுக்கும்படி இந்திய அரசிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG