தமிழர்கள் பொருளாதார நோக்கத்தை முதன்மைப் படுத்தியே வெளிநாடுகளிடம் புகலிடம் கோருகின்றனர் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடமொன்றுக்கு வழங்கிய பேட்டியிவேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எமது நாட்டை பொறுத்த வரையில் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு அச்சுறுத்தலோ கிடையாது. ஆனால் இவர்கள் பொருளாதார நோக்கமொன்றை மையமாகக் கொண்டு வெளிநாடுகளிடம் புகலிடம் கோருகின்றனர்.
நாட்டில் தற்போது யுத்தம் முடிவடைந்து சுமுகமான நிலை காணப்படுகின்றது. எனவே எவரும் அச்சம் கொள்ள வேண்டியது இல்லை. இந்நிலையில் நாட்டின் பெயருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். என தெரிவித்தார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 15 அக்டோபர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக