நாவலப்பிட்டிய குருந்துவத்தைப் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக 14 வயது மாணவனை குருந்துவத்தைப் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்
.இது பற்றி மேலும் தெரிய வருவதாவது-
சிறுமியை வீட்டில் வைத்து விட்டு பெற்றோர்கள் பக்கத்துத் தோட்டத்தில் வேலை செய்யச் சென்றுள்ளனர். அச்சமயம் பக்கத்து வீட்டிலிருந்த 14 வயது மாணவன் வீட்டினுள் புகுந்து குற்றம் புரிந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
மேற்படி சிறுமி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குருந்துவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.ரி. சஞ்சீவ தலைமையிலான குழு இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளது
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 12 அக்டோபர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக