அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

யுவதியை வல்லுறவுக்குட்படுத்தி திருமணம் செய்தவர் கைது

24வயதான யுவதியொருவரை கடத்திச் சென்று வல்லுறக்குட்படுத்திவிட்டு பின்னர் அந்த யுவதியின் சம்மதமின்றியே அவரை திருமணம் செய்த ஒருவரை மாத்தறை பொலிஸார் இன்று கைது செய்தனர்.

இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் மூலம் இந்த யுவதியை மேற்படி சந்தேக நபர் சந்தித்து தான் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் ஆதரவாளர் எனும் அவர் மூலம தொழிலொன்றைப் பெற்றுக்கொடுப்பதாகவும் ; யுவதிக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.
அதன்பின் மேற்படி எம்.பியிடம் கடிதமொன்றைப் பெறுவதற்காக அக்குரஸ்ஸவுக்கு வருமாறு யுவதியை அழைத்து பின்னர் அவரை அம்பலாங்கொடைக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்பின் யுவதியை அச்சுறுத்தி அவரை திருமணம் செய்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து தப்பியோடிய யுவதி இது தொடர்பாக பொலிஸாரிடம் புகாரிட்டுள்ளார்.
இச்சந்தேக நபர் ஏற்கெனவே திருமணம் ஆனவர் எனவும் நாமல் ராஜபக்ஷ எம்.பியுடன் எவ்வித தொடர்பும் இல்லாதவர் எனவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
மேற்படி யுவதி மருத்துவ சோதனைகளுக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளார். சந்தேக நபர் நாளை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்

0 கருத்துகள்:

BATTICALOA SONG