வடக்கின் வசந்தம், கிழக்கின் எழுச்சி போன்ற திட்டங்களுக்கு மேலதிகமாக மூன்றாண்டு அபிவிருத்தித் திட்டமொன்று விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய றம்புக்வெல தெரிவித்தார்.
இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது யுத்தம் முடிவுற்றதையடுத்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் துரிதமாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
வடக்கின் வசந்தம், கிழக்கின் எழுச்சி போன்ற திட்டங்களுக்கு மேலதிகமாக செயற்படுத்தப்படவுள்ள இம்மூன்றாண்டு திட்டம், வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்காகக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
சனி, 11 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக