இலங்கையின் அரசியலமைப்பில் செய்யப்பட்டுள்ள புதிய திருத்தங்களை அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது. இத்திருத்தங்கள் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதாக அமெரிக்கா இன்று கூறியுள்ளது.
ஒருவர் இரு தடவைகளுக்கு மேல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கான கட்டுப்பாட்டை நீக்குவதுடன் பொலிஸ், நீதிச்சேவை, தேர்தல் ஆணைக்குழு முதலானவற்றுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கும் ஜனாதிபதிக்கு பரந்த அதிகாரத்தை வழங்கும் அரசியலமைப்புத் திருத்தம் கடந்த புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
"இத்திருத்தங்கள் சமநிலைத் தன்மையை பலவீனமாக்குவதுடன் அரசியலமைப்பு ஜனநாயகத்தின் கொள்கைகளை பலவீனப்படுத்தவதாகவும் உள்ளமை குறித்து அமெரிக்கா கரிசணை கொண்டுள்ளது" என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பி.ஜே. கிராவ்லி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
சுயாதீன நிறுவனங்களை பலப்படுத்துமாறும் வெளிப்படைத்தன்மையையும் தேசிய நல்லிணக்கத்தையும் அதிகரிக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை கிராவ்லி கோரியுள்ளார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
சனி, 11 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக