அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 2 செப்டம்பர், 2010

அகதிகளுக்கு பயங்கரவாத தொடர்புகள் இருந்தால் நிரூபியுங்கள்: கனேடிய தமிழ் காங்கிரஸ்

எம்.வி. சன் ஸீ கப்பலில் வந்த தமிழ் அகதிகள் சிலருக்கு பயங்கரவாதத் தொடர்புகள் இருக்கலாம் எனக் குற்றம் சுமத்துவதை கனேடிய அரசாங்கம் நிறுத்திவிட்டு இது தொடர்பான ஆதாரங்களை முன்வைக்க வேண்டுமென கனேடிய தமிழ் காங்கிரஸ் கூறியுள்ளது.
கப்பலில் வந்தவர்கள் அனைவரிடமும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளவர்களா என்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கனேடிய குடிவரவு அமைச்சர் ஜேஸன் கென்னி கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே டேவிட் பூபாளப்பிள்ளை மேற்படி கருத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனேடிய தமிழ்க் காங்கிரஸின் பேச்சாளர் டேவிட் பூபாளப்பிள்ளை இது தொடர்பாக கனேடிய ஊடகமொன்றுக்கு கூறுகையில்,
'இது தொடர்பாக அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். எவருக்கேனும் எதிராக ஆதாரங்கள் இருந்தால் எமது சட்ட அமுலாக்கல் அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டு அந்நபர்களை எமது சட்டத்தின் முன் நிறுத்தட்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG