அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

அரசின் கொள்கைகளில் நீதிமன்ற தலையீடு கூடாது : மன்மோகன் சிங்

ரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
அரிசி, கோதுமையை ஏழைகளுக்கு வழங்குவது சாத்தியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்
.டில்லியில் தனது வீட்டில் பத்திரிகை ஆசிரியர்களுடனான கலந்துரையாடலில் பேசிய போதே அவர் இக்கருத்தை வெளியிட்டார்.
மத்திய அரசு கிடங்குகளில் பல லட்சம் தொன் அரிசி, கோதுமை வீணாகிறது. இதை ஏழை மக்களுக்கு அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று கடந்த மாதம் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், வீணாகும் அரிசி, கோதுமையை வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு வழங்கலாம் என்றனர்.
ஆனால் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் கூறினார்.
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு மீது தீர்ப்பு கூறிய நீதிபதிகள், அரசுக்கு ஆலோசனை அளிக்கவில்லை. தாங்கள் அளித்தது கட்டளை, இதை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது என்று கூறப்பட்டது.
இதையடுத்து இலவசமாக வழங்குவது குறித்து கடந்த அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
இதனிடையே பத்திரிகை ஆசிரியர்களிடம் பேசிய பிரதமர், அரசின் கொள்கைகளில் நீதிமன்றம் தலையிடுவது சரியானதாக இருக்காது என்றார்.
அனைத்து ஏழை மக்களுக்கும் அரிசி, கோதுமையை இலவசமாக வழங்குவது எளிதான காரியமல்ல.
இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் முழு தீர்ப்பையும் படிக்கவில்லை. இருப்பினும் உச்சநீதிமன்றத்தின் கரிசனம் நியாயமானது என்பதை உணர முடிகிறது.
2004ஆம் ஆண்டிலிருந்தே வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மானிய விலையில் அரிசி, கோதுமை வழங்கப்படுகிறது. கட்டுபடியாகும் விலையில் ஏழைகளுக்கு அரிசி, கோதுமை கிடைக்க வேண்டும் என்ற நீதிமன்ற கருத்தை ஏற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஏழைகளுக்கு இலவசமாக அரிசி, கோதுமையை வழங்கினால் அது விவசாயிகளை மன ரீதியில் பாதித்துவிடும். இதனால் விளைச்சலைப் பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தையே அவர்கள் கைவிட்டுவிடுவர் என்றார். கையிருப்பு ஒன்றும் இல்லாமலிருந்தால் பிறகு விநியோகிக்க ஏதுமில்லாத சூழல் ஏற்பட்டுவிடும் என்றார் மன்மோகன் சிங்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG