அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

சென்னை முதல்வர் அணி ஆஸி. முதல்வர் அணியை வென்றது

சென்னையில் தமிழக முதல்வர் அணி மற்றும் தெற்கு ஆஸ்திரேலிய முதல்வர் அணி இடையே நேற்று நடைபெற்ற நட்புறவு கிரிக்கெட் ஆட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக முதல்வர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தமிழக முதல்வர் அணியில் ஸ்டாலின் (கேப்டன்),பொன்முடி, ஜித்தன் ரமேஷ்,வெள்ளக்கோயில் சாமிநாதன்,நடிகர் அரவிந்த்,எஸ்.பி.பி. சரண்,ரமணா,துரைமுருகன், ஸ்ரீகாந்த், எல்.சிவராமகிருஷ்ணன், என்.வெங்கட்ராகவன்,அசோக் பொன்முடி,நடிகர் பிரசன்னா,சாக்ஷி சிவா ஆகியோர் பங்குபற்றினர்.
தெற்கு ஆஸ்திரேலிய முதல்வர் அணியில் மைக்ரேன் (கேப்டன்) ,ஏ.கே. தரீன் ,பீட்டர் வர்கீஸ் (இந்தியாவுக்கான தூதர்),பாப் போர்ட், ஆர்ச்சி, மார்க்,டெர்ரி, டேனி, பிரைன் மேயஸ், துஷார் அகர்வால், டோனி,மிக்லே,ஜெர்விஸ் ஆகியோர் பங்குபற்றினர்.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தெற்கு ஆஸ்திரேலிய அணி முதலில் துப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்தது. இதையடுத்து, அந்த அணி 10 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 37 ஓட்டங்கள் எடுத்தது.
அடுத்துக் களமிறங்கிய தமிழக முதல்வர் அணி 5.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 39ஓட்டங்கள் பெற்று வெற்றி பெற்றது.
தமிழக முதல்வர் அணியின் கேப்டன் ஸ்டாலின் பந்துவீச்சில், தெற்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக் ரேன் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலின், அசோக் பொன்முடி, எல். சிவராமகிருஷ்ணன், நடிகர் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG