அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

கத்திரிக்கோலால் தாக்கப்பட்ட தந்தை உயிரிழப்பு; மகன் பொலிஸாரால் கைது

தாய் மீது கத்திரிக்கோலினால் தாக்க முற்பட்ட தந்தையை தடுப்பதற்காக அதனைப் பறிக்க முற்பட்ட மகனினால் தவறுதலாக தாக்குதலுக்கு உள்ளான தந்தை உயிரிழந்த சம்பவமொன்று திவுலபிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அனுர காமினி அபேசிங்க (வயது 50) என்பவரே உயிரிழந்தவராவார். இதனையடுத்து அவரது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
சம்பவதினம் மேற்படி இளைஞனின் தந்தைக்கும் தாய்க்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளதையடுத்து கோபமடைந்த தந்தை அருகிலிருந்த கத்திரிக்கோலினால் அவரது மனைவி மீது தாக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது குறுக்கிட்ட அவர்களது மகன், தந்தையைத் தடுக்க முயற்சித்ததுடன் அவரது கையிலிருந்த கத்திரிக்கோலினையும் பறிக்க முற்பட்டுள்ளார். இந்நிலையில், அவ்வ்விருவருக்கிடையில் பெரும் போராட்டம் நடந்ததையடுத்து குறித்த கத்திரிக்கோல் தவறுதலாக தந்தையைத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதன்பின் சம்பவத்தில் உயிரிழந்தவரது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலுக் கூறினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG